Editorial / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
டப்ளியூ. எம். பைசல்
எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இராணுவ வீரொருவரை, பிரதேசவாசிகள் நையப்புடைந்து, எப்பாவல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகிய இராணுவ வீர்ர், சிகிச்சைக்காக, எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.
வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய், எப்பாவல பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் நேற்று முறைப்பாடு பதிவுசெய்துள்ளாரெனவும் எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளாகிய இராணுவ வீரர், எப்பாவல, கிரலோகம பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுவரும் இச்சந்தேகநபரை, தமுத்தேகம மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் எப்பாவல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
3 hours ago
7 hours ago
10 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
10 Mar 2026