Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 11 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
முந்தல் பிரதேச செயலக சிறுவர் பிரிவு ஏற்பாடு செய்த கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, உரிமை தொடர்பான விசேட செயலமர்வொன்று, முந்தல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது.
முந்தல் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் லஸந்த விக்ரமரத்ணவின் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில்,
முந்தல் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் எஸ்.ஜே.பி.ஜனக பர்னான்டோ மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கிராமப் புறங்களில் சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை அமைப்பதன் அவசியம் பற்றியும் சிறுவர்களின் பாதுகாப்பு, உரிமை தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.
புத்தளம் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் எச்.எம்.பிரியங்கிகா ஸ்ரீயானி, விசேட வளவாளராகக் கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .