2026 மார்ச் 11, புதன்கிழமை

ஏவுகணைத் தாக்குதல்களை முறியடித்த சவூதி அரேபியா

Freelancer   / 2026 மார்ச் 11 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முக்கிய விமானப்படை தளம் மற்றும் கிழக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பாரிய ஏவுகணைத் தாக்குதல்களைத் தாங்கள் முறியடித்துள்ளதாக சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இன்று புதன்கிழமை (11) சவூதி அரேபியாவை நோக்கிப் பல திசைகளிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன.

இதில் குறைந்தது 7 பலிஸ்டிக் ஏவுகணைகளை சவூதி வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்புகளோ அல்லது குறிப்பிடத்தக்க பொருள் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .