2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

செங்கல்ஓயாவில் மணல் அகழ்ந்த இருவர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

ஆராச்சிக்கட்டு செங்கல்ஓயாவில், அனுமதிப்பத்திரமின்றி,  மணல் அகழ்வில் ஈடுபட்ட  இருவரை, நேற்று (22) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், மணல் ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக்டர் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக, பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையத்து, பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளர். .

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்களை, சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .