Princiya Dixci / 2015 நவம்பர் 01 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்
தெற்காசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து பாடசாலைகளுக்கிடையில் நடத்திய டிஜிடல் சித்திரப்போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி உயர் தர பிரிவு மாணவர்களான எப்.எம்.மஹ்ரான் 03ஆம் இடத்தையும் எம்.கே.ஹம்தான் 05ஆம் இடத்தையும், ஆர்.எம்.சிப்ரி 06ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
100 மாணவர்களுக்கு மேல் கலந்துகொண்ட இப்போட்டியில் சாஹிரா மாணவர்கள் மூவர் முதல் பத்துக்குள் இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை (31) இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் இவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் பிரதி அதிபர் எம்.எஸ்.எஸ். ரஜிய்யா, ஆசிரியர்களான எச்.எச்.எம்.சஜூ, எம்.என்.எப்.புஷ்ரா ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
18 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
1 hours ago