2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

சீரற்றுக்கிடக்கும் பஸ் தரிப்பிடங்கள்

Niroshini   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் உள்ள பஸ் தரிப்பிடங்கள் சேதமடைந்து காணப்படுவதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

புத்தளம், பாலாவி, மதுரங்குளி, ஆகிய முக்கிய நகரங்களில் காணப்படும் பஸ் தரிப்பிடங்களே இவ்வாறு உடைந்து காணப்படுவதாக பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால், மழை மற்றும் வெயில் காலங்களில் குறித்த பஸ் தரிப்பிடங்களில் நிற்க முடியாமல் இருப்பதுடன், பஸ் தரிப்பிடங்கள் இருந்தும் வீதியோரத்தில் நின்றே பயணங்களை மேற்கொள்வதாகவும் பயணிகள் குறிப்பிடுகின்றனர்.

எனவே, குறித்த பஸ் நிலையங்களை உரிய முறையில் புனரமைப்பதற்கு சம்பந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X