Princiya Dixci / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம். சனூன்
புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் சிறுவர்களுக்கான இஸ்லாமிய கற்கைநெறிக்கு 2016ஆம் ஆண்டுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட 03 வருடங்கள் காலவரையறைக்குட்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் அரபு எழுத்து அறிமுகம், தஜ்வீத், தர்தீல், அல்-குர்ஆன், ஹிப்ல் அல்-குர்ஆன், திக்ர்கள், துஆக்கள், அகீதஹ், பிக்ஹ், ஹதீஸ் மனனம், கசீதஹ், இஸ்லாமிய கதைகள் ஆகியன போதிக்கப்படவுள்ளன.
ஒலி, ஒளி சாதனங்களை துணையாகக் கொண்ட நவீன கற்பித்தல் முறைமைகளோடு மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் கலை விழாக்களும் நடத்தப்பட்டு கற்கைநெறியின் முடிவில் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
பிள்ளைகளை சேர்க்க விரும்புவோர் இம்மாதம் 25ஆம் திகதிக்கு முன்னதாக ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம், இல.31, ஒழுங்கை இல.: 09, போல்ஸ் வீதி, புத்தளம் எனும் முகவரியுடன் அல்லது 032 571 4252, 071 570 6 222 எனும் இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு அதன் தலைவர் அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசர் (ரஹ்மானி) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7 minute ago
14 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
2 hours ago
05 Nov 2025