Princiya Dixci / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
புத்தளம், தம்போவ புனிதப் பிரதேசத்திலுள்ள சரணாலயத்தில் மணல் அகழ்ந்து வியாபாரம் செய்பவர்களைத் தேடி, இன்று செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை சென்ற விசேட பொலிஸ் அதிரடிப்படை குழுவினரில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் கட்டுத்துவக்கு வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, படுகாயமடைந்த கான்ஸ்டபிளை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டபிள்யு.ஏ. விஜேயசிறி பண்டார என்ற கான்ஸ்டபிளே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
குறித்த பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மணல் கொள்ளையர்களை கைது செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பல முறை சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறான ஒரு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த அனர்த்தம், இன்று இடம்பெற்றுள்ளது.
15 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago