Thipaan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம். ஹிஜாஸ்
புத்தளம், ரத்மல்யாய பகுதியில், சிறுவர்கள் துஷ்பிரயோகப் படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெள்ளிக்கிழமை(16) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டு வரும் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் உரிமைகள் மீறல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அத்துடன் புத்தளம் நகரில் அண்மையில் ஆறு வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்;கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை(16) ஜும்ஆத் தொழுகையையடுத்து ஆர்ப்பாட்டம் ஒன்று வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது சிறுவர்கள் முதல் பெரியோர் வரை என அதிகளவிலான பொது மக்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
50 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago