முஹம்மது முஸப்பிர் / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் களிமண் ஏற்றிச் சென்ற டிரக்டர்கள் இரண்டைக் கைப்பற்றியுள்ளதாக, ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
குளங்களைப் புனரமைப்புச் செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், வெளியேற்றப்படும் களிமண்களை ஏற்றிச் செல்வதற்காக பிரதேச செயலகத்தால் 3 கிலோ மீற்றர் தூரத்துக்ககே அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
எனினும், அத்தூரத்தைத் தாண்டி அனேக வாகன சாரதிகள் களி மண்ணை ஏற்றிச் செல்வதாகத் கிடைத்த தகவலுக்கமைய இவை கைப்பற்றப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், குளத்து களி மண் என்ற போர்வையில் போலி அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தி, வேறு இடங்களில் வெட்டப்படும் மண் மற்றும் களி மண் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்படுவது தொடர்பிலும் தகவல் கிடைக்கப்பெற்றதாகவும் ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்தும் இவ்வாறான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக, ஆராச்சிக்கட்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தர்மசிரி விஜேசிங்க தெரிவித்தார்.
52 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
8 hours ago
9 hours ago