முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூன் 27 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெங்கு பரிசோதனை நடவடிக்கைக்காகச் சென்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், சிலாபம் - வெல்ல மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவரைக் கைதுசெய்ததாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்ல மீனவக் கிராமத்தில் அமைந்துள்ள வீடுகளின் சுற்றுப்புறங்களைப் பரிசோதனை செய்வதற்காக, 10 பேர்களைக் கொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவொன்று, அப்பிரதேசத்துக்குச் சென்றிருந்தது.
அதன்போது, அங்கு ஒரு வீட்டில் டெங்கு நுளம்பு பெருகும் வகையிலான சூழல் காணப்பட்டதால், அவ்விட்டு உரிமையாளருக்கு, அது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆலோசனை வழங்கினர்.
இந்த எச்சரிக்கையினால் கோபமுற்ற குறித்த மீன் வியாபாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, அவர்களை அவ்வீட்டுச் சூழலிலிருந்து வெளியேற்றியதாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டையடுத்து உடனடியாகச் செயற்பட்ட சிலாபம் பொலிஸார், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குறித்த மீன் வியாபாரியைக் கைது செய்தனர். சிலாபம் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago