எம்.யூ.எம். சனூன் / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் நகரின் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களான முள்ளிபுரம் மற்றும் வெட்டாளை போன்ற பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு சிரமதானம், நேற்றுக் காலை நடைபெற்றது.
புத்தளம் மத்திய லயன்ஸ் கழகம் மற்றும் வெட்டாளை கிராம சேவையாளர் காரியாலயம் என்பன இணைந்து இந்த சிரமதான பணியை ஏற்பாட்டு செய்திருந்தன.
புத்தளம் மத்திய லயன்ஸ் கழக தலைவரும் புத்தளம் தள வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகருமான டொக்டர் நகுலநாதன், லயன்ஸ் கழக தவிசாளரும் புத்தளம் முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளி தலைவருமான பீ.எம். அப்துல் ஜனாப், லயன்ஸ் கழக செயலாளர் திரு.மனோகரன், பொது சுகாதார பரிசோதகர் எம். தாரிக், கிராம சேவையாளர் எம்.டி. தவ்பீக்கா உள்ளிட்ட பிரதேசத்தின் பொதுமக்கள் பலரும், இந்த சிரமதான பணியில் கலந்துகொண்டனர்.
டெங்கு நுளம்புகள் அதிகமாகக் காணப்படுவதாகக் கூறப்படும் பிரதேசங்களுக்கு நேரடியாக விஜயம் செய்த அதிகாரிகள், பொது மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் தொடர்பான அறிவுரைகளையும் வழங்கினர்.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025