Princiya Dixci / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை (18) மாலை கல்பிட்டி பத்தலங்குண்டு மற்றும் குதிரைமலை பிரதேசத்துக்குட்பட்ட ஆழ்கடல் பகுதியில் வைத்தே இம்மீனவர்கள் கல்பிட்டி விஜய கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்மீனவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் இரண்டு சுறுக்கு வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 500 கிலோ மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தளம் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
54 minute ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
9 hours ago
05 Nov 2025