Thipaan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் பொலன்னறுவைக் காரியாலயத்தினால் தென்னை சார்ந்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் முதன் முறையாக தமிழ் மொழியில், பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த பிரதேச செயலகத்துக்;கு உட்பட்ட கட்டுவன்வில கிராமத்தில் வியாழக்கிழமை(15) இடம்பெற்றது.
இவ்வேலைத்திட்டம், தென்னைப் பயிர் செய்கைச் சபையின் பொலன்னறுவை பண்ணைத் திட்டமிடல் உத்தியோகத்தர் பி. உதயச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இப்பயிற்சி நெறியில், தென்னை அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர். டபிள்யூ.பி. துலானி பிரியங்கிகா, கமநல கேந்திர நிலையத்தின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஏ.எச். ஆதம்லெப்பை, மகாவலி அதிகார சபையின் விவசாய உத்தியோகத்தர் ஆர்.எம். சமிலா ரத்னாயக்க ஆகிய அதிகாரிகள் உட்பட கிராம மக்களும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு பயனாளிகளுக்கு தென்னைப் பயிர்ச் செய்கை சார்ந்த அனைத்து விடயங்களையும் பிரயோகப் பயிற்சிகளோடு தெளிவாக விளக்கப்பட்டதுடன் தென்னை நாற்றுக்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையினால் அமுல்படுத்தப்படும் குறைந்த வட்டிக் கடனான கப்றுக ஆயோஜன திட்டம் பற்றியும் பண்ணைத் திட்டமிடல் உத்தியோகத்தர் பி. உதயச்சந்திரனால் விளக்கமளிக்கப்பட்டது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago