2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தீயணைப்பு பவுசர் விபத்து

Thipaan   / 2016 ஜனவரி 02 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

மாதம்பை பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காகச் சென்று கொண்டிருந்த சிலாபம் நகர சபையின் தீயணைக்கும் பிரிவுக்குரிய தண்ணீர் பவுசர், சிலாபம்- கொழும்பு பிரதான வீதியில் மைக்குளம் பிரதேச பள்ளிவாசலுக்கருகில்  வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தண்ணீர் பவுசர் வீதியை விட்டு விலகி அருகிலிருந்து பள்ளத்தினுள் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பணியாளர்கள் எவ்வித காயமுமின்றி தப்பியுள்ளனர்.

இந்த விபத்தினால் தண்ணீர் பவுசருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X