Princiya Dixci / 2016 ஜனவரி 08 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவியேற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இஸ்லாமிய மத வழிபாட்டு பிரார்த்தனை நிகழ்வு, புத்தளம் நூல் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (07) மாலை இடம்பெற்றது.
புத்தளம் நகர சபை இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
நகர சபையின் செயலாளர் டபிள்யூ.ஜீ. நிஷாந்த குமார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் பெரிய பள்ளியின் பரிபாலன சபைத் தலைவர் பீ.எம். ஜனாப், பெரிய பள்ளியின் பிரதம பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ரிப்கான், புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி எம்.எஸ்.எம். சபீக், நகர சபையின் அதிகாரிகள், நூல் நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் முன்பள்ளி ஆசிரியைகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அனைத்து இன மக்களும் ஒற்றுமை, அன்பு மற்றும் சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்வதன் முக்கியத்துவம் பற்றி கிராமசேவயாளர் அஷ்ஷெய்க் அலி சப்ரி இங்கு விரிவான உரை நிகழத்தினார்.
ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி பெரிய பள்ளியின் பிரதம பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ரிப்கான் விசேட துஆ பிரார்த்தனைகளை மேற்கொண்டார்.
56 minute ago
1 hours ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
3 hours ago
05 Nov 2025