முஹம்மது முஸப்பிர் / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
2010ஆம் ஆண்டு, வென்னப்புவ, சிரிகம்பள பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில், சிலாபம் மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கின் சாட்சியாளர் ஒருவர், 2 வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளாரென வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிகம்பள பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.
கொலைச் சம்பவத்தில் சாட்சியாளரான இந்நபர், நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாமல் நீதிமன்றத்தைப் புறக்கணித்து பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இரவு நேரங்களில் திருட்டுத் தனமாக தனது வீட்டுக்கு வந்து செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவரது வீட்டை, பொலிஸார் முற்றுகையிட்ட போதே, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
20 minute ago
41 minute ago
6 hours ago
10 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
41 minute ago
6 hours ago
10 Mar 2026