Editorial / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}


ரொஷான் துசார தென்னகோன்
பொலன்னறுவை, கிரதலே வாவியில் குளிப்பதற்காகச் சென்ற இருவர், இன்று (20) பகல், நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் என்று, பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.
மினுவன்கொடயிலிருந்து பொலன்னறுவைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரே, இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வருபவர் என்று கூறப்படும் நெரஞ்சன் விக்ரமத்ன (வயது 45) மற்றும் அவரது மகளான செவ்மினி நிஷாந்தி விக்ரமத்ன (14) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.
இருவரின் சடலங்களையும் மீட்கும் பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025