Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2017 ஜூன் 14 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரங்கிகா லொக்குகரவிட்ட
காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில், அவசர சிகிச்சைகளுக்கு அத்தியாவசிய மருந்துகளான அதிரினலில் மற்றும் பொட்டாசியம் குளோரைட் ஆகியவை இல்லாமையால், நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வாமை மற்றும் அவசர சிகிச்சைக்காக அத்தியாவசியமான தேவையாக அதிரினலில் உள்ளதுடன், உயிரை காப்பதற்கு அவசியமாக பொட்டாசியம் குளோரைட் காணப்படுகின்றது.
நாளொன்றுக்கு அதிரினலில் 100 குப்பிகள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பயன்படுத்தப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தற்போது வைத்தியசாலையில் மருந்த களஞ்சியத்தில் அதிரினலின் இல்லை என்றும், இதற்கு முன்னர் பல்வேறு வாட்டுகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிரினலின், தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாளொன்றுக்கு 30 -40 குப்பிகள் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் குளோரைட் மருந்து, கராப்பிட்டிய வைத்தியசாலையில் தற்போது இல்லை என்றும் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இது தொடரப்பில், வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஜயம்பதி சேனாநாயக்கவிடம் கேட்டபோது, இரண்டு வாரங்களுக்கு முன்னரேயே, இந்த மருந்துகள் தேவையென மருந்து விநியோகப் பிரிவுக்கு அறிவித்து விட்டதாகவும், விரைவில் இந்த மருந்துகள் கிடைத்துவிடும் என்றும் கூறினார்.
“களஞ்சியசாலையில் இந்த மருந்துகள் இல்லையென்பது உண்மை. எனினும், அவசர நேரங்களில் மருந்தகங்களில் அவற்றைப் பெற்று சிகிச்சையளிக்கப்படும். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த மருந்துகளில் 5 குப்பிகள் மாத்திரமே நாளொன்றுக்கு பயன்படுத்தப்படுகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
30 minute ago
45 minute ago