2025 மே 07, புதன்கிழமை

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு

Kogilavani   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவிக்கு புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (15) பகல் வரவேற்பளிக்கப்பட்டது.

பாடசாலையின் நிர்வாகம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

கல்லூரி அதிபர் எஸ்.ஏ.சி.யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.அலிசப்ரி, ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஓ.அலிகான், புத்தளம் முஹியத்தீன் ஜும்மா பள்ளி நிர்வாக சபை தலைவர் பீ.எம்.ஜனாப் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X