2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பகையாளியை துரத்திச் சென்று கொலை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் பழைய பகை காரணமாக நபரொருவர், நேற்று புதன்கிழமை (09) மாலை ரீப்பையினால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். 

இத்தாக்குதல் சம்பவத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த கச்சகடுகே நெல்சன் பெர்ணான்டோ (வயது 58) என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர், இயந்திரக் கோளாறு காரணமாக இடைநடுவில் நின்ற தனது மோட்டார் சைக்கிளை திருத்துவதற்காக சென்றுகொண்டிருந்த போது, சில காலமாக தன்னுடன் பகையுடன் இருந்த சந்தேகநபர், எதிரே வருவதைக்கண்டு, அச்சமடைந்து தனது மோட்டார் சைக்கிளையும் அவ்விடத்திலேயே விட்டு விட்டு அங்கிருந்து ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தன்னுடன் குரோதம் கொண்டிருந்தவர் தப்பிச் செல்வதைக் கண்ட சந்தேகநபர், அருகிலிருந்த வீடொன்றிலிருந்து ரீப்பையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்துள்ளதுடன், பலமான முறையில் தாக்கியுள்ளதாகவும், இதனால் பலத்த காயங்களுக்குள்ளான நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக தங்கொட்டுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அவர் உயிரிழந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான அதே பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய  நபர், தங்கொட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தங்கொட்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரதீப் குமாரவின் உத்தரவின் பேரில் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X