Editorial / 2017 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேருவளை கடற்கரை ஓரமாக மிக நீண்டகாலமாக நிறுத்தப்பட்டுள்ள படகுகளில் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக, டெங்கு நுளம்புகள் பெருகும் வாய்ப்பு உள்ளதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் படகுகள் சில, பாவனைக்கு உட்படுத்தாத வகையில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நீர் தேங்கி, நுளம்புகள் பெருகுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாவனைக்கு உட்படுத்தாத வகையில் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் குறித்து அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வருடம் ஓகஸ்ட் 26ஆம் திகதி வரையில், பேருவளை சுகாதார வைத்திய அதிகாரியின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஆயிரத்து 450 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
28 minute ago
44 minute ago
53 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
44 minute ago
53 minute ago
57 minute ago