Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.யூ.எம். சனூன் / 2020 ஜனவரி 24 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் - முள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை , மகன் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வேளையில் படகு கவிழ்ந்ததில் தந்தை காணாமல் போயுள்ளதுடன், மகன் நீந்தி உயிர் பிழைத்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் இரவு (23) புத்தளம் சிறுகடலில் மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையை எடுப்பதற்கு நேற்று அதிகாலை தந்தையும் மகனும் சென்றுள்ளனர்.
இதன்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் படகு கவிழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இவ்வாறு காணாமல் போனவர் புத்தளம் நகரை சேர்ந்த எஸ்.ஜீ.எம்.ரபீக் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மீனவர்கள் , கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டபோதிலும் இன்று காலை வரை காணாமல் போனவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், கடற்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago