2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பராக்கிரம சமுத்திரத்துக்கு ஆபத்து?

Princiya Dixci   / 2016 ஜனவரி 20 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னகோன் 

பராக்கிரம சமுத்திரத்தில் பரவலாக சல்வீனியா பாசி படர்ந்து வருவதன் காரணத்தினால், பாரிய பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக, பொலன்னறுவையிலுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பராக்கிரம சமுத்திரத்தின் சுமார் 15-20 சதவீதமான பகுதி, தற்போது சல்வீனியா பாசியினால் படர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த பாசியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை, விவசாயிகள் மற்றும் சிவில் முகவர்களூடாக முன்னெடுக்கவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கத்தின் பொலன்னறுவை மாவட்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X