முஹம்மது முஸப்பிர் / 2017 செப்டெம்பர் 15 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலையில் பலத்த காயத்துடன் காணப்பட்ட பெண் ஒருவரின் சடலத்தை வீடொன்றிலிருந்து மீட்டுள்ளதாக தங்கொட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (14) மாலை 5.00 மணியளவில் தங்கொட்டுவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோரக்குளி எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்தே இவ்வாறு பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய குமாரி தம்மிக்கா ரொட்ரிகோ எனும் பெண்ணே இவ்வாறு சந்தேகத்துக்கிடமாக முறையில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் தங்கொட்டுவ பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
7 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
7 minute ago
18 minute ago