Princiya Dixci / 2015 நவம்பர் 30 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து படுகாயங்களுக்குள்ளான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன், இன்று திங்கட்கிழமை (30) அதிகாலை உயிரிழுந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம், பங்கதெனிய பிரதேசத்தின் புகையிரதக் கடவைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பஸ்ஸில் பயணித்த போது குறித்த பஸ், புத்தளம் வீதியின் பங்கதெனிய புகையிரதக் கடவைக்கு அருகில் திடீரென வேகத்தைக் குறைத்தமையால் பஸ்ஸிலிருந்து வெளியில் வீசப்பட்டுள்ள இவ்இளைஞர், அதே பஸ்ஸில் சிக்கி பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், சிலாபம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக் கைது செய்துள்ள சிலாபம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
45 minute ago
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
01 Feb 2026
01 Feb 2026