Editorial / 2020 ஏப்ரல் 02 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் மதுரங்குளி முஸ்லிம் ஹேண்ட்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களை பாதுகாக்கும் நோக்கில், கொரோனா பாதுகாப்பு அங்கிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
புத்தளம் ஆதார வைத்தியசாலை, சிலாபம் பொது வைத்தியசாலை, மாதம்பே வைத்தியசாலை, புத்தளம் இராணுவ முகாம் மற்றும் வான்படை முகாம் ஆகியவற்றுக்கு இந்த கொரோனா பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
மதுரங்குளி கரிக்கட்டையில் அமைந்துள்ள முஸ்லிம் ஹேண்ட்ஸ் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து நேற்று (01) காலை இவை கையளிக்கப்பட்டன.
முஸ்லிம் ஹேண்ட்ஸ் அமைப்பின் பணிப்பாளர் ஏ.எம்.மிஹ்லார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொரேனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டவர்களை பரிசோதனை நிலையங்களுக்கு கொண்டு செல்லும் சுகாதார தரப்பினருக்கும் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் பாதுகாப்பு கடைமையிலுள்ள உத்தியோகத்தர்களுக்கும் வழங்குவதற்கென 400 கொரோனா பாதுகாப்பு அங்கிகள் இலவசமாக கையளிக்கப்பட்டன.

5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago