2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பாலர் பாடசாலை ஆசிர்களுடனான கலந்துரையாடல்

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட கரம்பை தொடக்கம் கற்பிட்டி வரையிலான பாலர் பாடசாலைகளின் அபிவிருத்தி சம்பந்தமான விசேட கலந்துரையாடல், திங்கட்கிழமை நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கற்பிட்டி அமைப்பாளர் ஏ.ஆர்.எம். முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற குறித்தக் கலந்துரையாடலில் அ.இ.ம.கா. நுரைச்சோலை அமைப்பாளர் அஸ்லம், கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஆகியோருடன், கரம்பை தொடக்கம் கற்பிட்டி வரையிலான பாலர் பாடசாலைகளின் ஆசிரியைகளும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சியால் மீள்குடியேற்ற செயலணி ஊடாக கரம்பை தொடக்கம் கற்பிட்டி வரையிலான பாலர் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைக் கொண்டு குறித்த பலர் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கற்பிட்டி அமைப்பாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X