Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசார் தீன்
கடலரிப்பு காரணமாக, புத்தளம் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகள் இயற்கை அழிவுகளை எதிர்கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
நுரைச்சோலை கரையோரப்பகுதியின் கொய்யாவாடி, இலந்தையடி , ஆலங்குடா ஆகிய பிரதேசங்கள் தொடர்ச்சியாக கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதுவரை சுமார் 200 மீற்றர் வரையானப் பகுதி கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளதாக, அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கரையோரப்பகுதிகளில், சுமார் 150க்கும் அதிகமான மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன், கடலரிப்பு காரணமாக இவர்களின் வாழ்வாதாரச் செயற்பாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மீனவர்கள் தங்களின் படகுகளை கரையோரங்களில் நிறுத்தி வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. சுனாமி ஏற்பட்டபோது, கரையோரப்பகுதிகளில் பாதுகாப்புக்காக சவுக்கு மரங்கள் நாட்டப்பட்டபோதிலும், கடலரிப்பு காரணமாக குறித்த மரங்கள் சரிந்து வீழ்வதாக, மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கடலரிப்பை தடுப்பதற்காக கருங்கற்கள் இடப்பட்டுள்ள போதிலும், கடலரிப்பின் தீவிரம் அதிகரித்துள்ளதாக, அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கடலரிப்பு காரணமான, தமது குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளாகி வருவதையிட்டு, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago