2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

புத்தளத்தில் சுதந்திர தின ஒத்திகை

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்

புத்தளம் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தையொட்டி,  புத்தளம் கொழும்பு முகத்திடலில், இன்று (03) ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்றன.

புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஆரம்பமாகி,  புத்தளம் அஞ்சல் அலுவலக சுற்றுவட்டம் ஊடாக மீண்டும்  கொழும்பு முகத்திடல் வரை ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில், பொலிஸார், முப்படை வீரர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு’  என்ற தொனிப்பொருளில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு,  பாடசாலை மாணவர்களுக்கு விசேட பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .