Editorial / 2018 செப்டெம்பர் 03 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த, முஹம்மது முஸப்பிர்
புத்தளம்- மங்களஎலிய பகுதியில் நேற்று இரவு (02), நபரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான, 37 வயதுடைய, கீத் மங்கள பெரேரா என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட, 50 வயதுடைய நபரை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்த போர 12 ரக துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
உயிரிழந்த நபருக்கும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபருக்குமிடையில் நீண்ட காலம் நிலவி வந்த பகையே கொலைக்கு காரணமென, பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025