2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

புத்தளத்தில் நடமாடும் ஏ.டி.எம் சேவை

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நேரங்களில், வங்கிகளில் பணத்தை பெற முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்கு, தேசிய சேமிப்பு வங்கி நடமாடும் சேவையை  இன்று (16) புத்தளத்தில் முன்னெடுத்திருந்தது. 

ஏ.டி.எம். இயந்திரத்தின் மூலம் பணத்தை பெற்றுக்கொள்வதற்காக இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது. 

புத்தளம் வான் சந்தி, வெட்டுக்குளம் சந்தி மற்றும் நூர் பள்ளி சந்தி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை இன்று (16) முன்னெடுக்கப்பட்டது. 

பொதுமக்களின் நலன்கருதி அவர்களின் வீட்டுக்கு அருகிலேயே பணத்தை பெற்றுக்கொள்ளும் வகையில், இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக, முகாமையாளர் எம்.ஐ.எம். பர்ஹான் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .