Editorial / 2018 மே 04 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் பாலாவி, உழுக்கப்பள்ளத்தில் இயங்கிவரும் நிதாஉல் ஹக் தஃவா நிலையத்தின் ஏற்பாட்டிலும், புத்தளம் மாவட்ட ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் (UTJ) அணுசரணையிலும் போதை ஒழிப்பு மாநாடு ஒன்று நாளை (05) சனிக்கிழமை உழுக்காப்பள்ளம் நவோதய பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அஷ்ஷெய்க். ஏ.எல்.அப்துல் வாஹித் (மதனி) தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த மாநாடு "நாளைய தலைமுறையினரை போதையற்ற சமுதாயமாய் உருவாக்குவோம்" எனும் கருப்பொருளில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்பெறும்.
இதன்போது, "மறந்துவிட்ட மறுமை நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அடையாளங்களும்" எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஆதில் ஹஸனும், "அதிகரித்து வரும் போதைப் பாவனையும் முஸ்லிம்களின் கடமையும்" அஷ்ஷெய்க் முர்ஷித் அப்பாஸியும் விஷேட சொற்பொழிவுகளை நிகழ்த்தவுள்ளனர்.
பெண்களுக்கு பிரத்தியேக இடவசதியும் செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் தவறாது சமூகமளிக்குமாரும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025