ஹிரான் பிரியங்கர / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் கல்லடி காட்டுப்பகுதியில் கொம்பன் யானையொன்று கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராட்சத தனி யானை என அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்ட யானையே கொலை செய்யப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுப் பகுதிக்கு நேற்று (09) விறகுகள் சேகரிப்பதற்காக சிலர் சென்ற வேளை, யானை உயிரிழந்துள்ள நிலையில் இருந்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் யானை உயிரிழந்துள்ள விதம் குறித்து சோதனை நடத்தியுள்ளனர். குறித்த யானை, துப்பாக்கிச் சூட்டின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, யானைகளின் பாதுகாப்புக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியை நாடவுள்ளதாக நிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
காடுகளில் யானைகளின் நடமாட்டத்தை அறிவதற்காக விசேட கருவிகளைக் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் இதன் மூலம் யானைகளைக் கொலை செய்ய முற்படுபவர்களை இலகுவாக அடையானம் காண முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025