Editorial / 2020 மார்ச் 12 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரன் பிரியங்கர
2020 பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக, சுயேட்சைச் குழுவொன்று, இன்று (12) வேட்பு மனுவை கையளித்துள்ளதாக, புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி சந்திரசிறி பண்டார தெரிவித்தார்.
அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் இதுவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லையெனத் தெரிவித்த அவர், 5 சுயேட்சைக் குழுக்கள் மாத்திரமே கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில், அதில் ஒரு குழு, இன்று (12) வேட்பு மனுவை கையளித்ததாகத் தெரிவித்தார்.
இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, 86 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ் மாவட்டத்திலேயே அதிகளவான சுயேட்சைக் குழுக்கள் இம்முறை கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, 14 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
39 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago