2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

புத்தளம் பகுதிகளில் அதிரடி சோதனை

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜுட் சமந்த

இத்தாலி உள்ளிட்ட வேறு நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்து, தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மத்திய நிலையங்களுக்குச் செல்லாதுள்ள 1,411 பேர், புத்தளம் மாவட்டத்தில் உள்ளனரென, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 01 ஆம் திகதிக்குப் பிறகு வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்களை கண்டறியும் நடவடிக்கையை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்  இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இனங்காணப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக,  சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், அவர்கள் தங்கியிருந்த இடங்கள், வீடுகளை சோதனையிட்டு வருவதுடன், தினமும் அவர்களை கண்காணித்தும் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி  வருவதாக, சுகாதாரப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இனங்காணப்பட்டவர்களை அவர்களின் வீட்டி​லேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .