Editorial / 2024 மார்ச் 08 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்
கற்பிட்டி - நுரைச்சோலை , பூலாச்சேனை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
நுரைச்சோலை - பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த முஹம்மது சஹீர் சகி முஹம்மது எனும் 4 வயது சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குறித்த சிறுவன் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் டிமோ பட்டா வகையைச் சேர்ந்த லொறி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டுக்கு முன்பாக தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த குறித்த சிறுவன், தனது சிறிய துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த சிறுவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026