2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பாடசாலை பஸ் மோதியதில் மாணவி பலி; சகோதரன் படுகாயம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 12 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம், ஹேட்டிப்பொல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கொட்டம்பிட்டிய சந்தியிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் தனியார் பஸ், பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட இரு மாணவர்களை மோதியதில் மாணவி உயிரிழந்துள்ளதுடன், மாணவன் படுகாயங்களுடன் ஹெட்டிப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை (12) காலை 7.10 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்த மாணவி, ஹெட்டிப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த ஹலிம் பாத்திமா அகீலா (வயது 9) எனவும் படுகாயங்களுக்குள்ளான 13 வயது மாணவன், உயிரிழந்த மாணவியின் சகோதரன் எனவும் ஹெட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், ஹெட்டிப்பொல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X