2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பெண் முகாமையாளர்களுக்கிடையில் குடும்பிச் சண்டை

Princiya Dixci   / 2016 மார்ச் 29 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

புத்தளம் பிரதேச சபையின் உதவிப் பெண் முகாமையாளர் ஒருவர், சக உதவிப் பெண் முகாமையாளர்களான இரு பெண்களால், குடும்பியில் பிடித்துத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தனிப்பட்ட ரீதியாக ஏற்பட்ட மனக்கசப்புகளே இத்தாக்குதலுக்குக் காரணம் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

இத்தாக்குதல் சம்பவம், புத்தளம் பிரதேச சபையில் நேற்று திங்கட்கிழமை (28) காலை 9 மணியளவில் இடம்பெற்றதாகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியது மட்டுமின்றி குடும்பியில் பிடித்து வைத்துக்கொண்டு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான உதவிப் பெண் முகாமையாளர், முந்தல் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X