2025 ஜூலை 03, வியாழக்கிழமை

புத்தளத்தில் சமுத்திரவியல் பல்கலைக்கழகம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவினதும் தனது முயற்சியினாலும் புத்தளம் பிரதேச மாணவர்களின் நலனைக்கருத்திற்கொண்டு புத்தளத்தில் சமுத்திரவியல் பல்கலைக்கழகமொன்று அமைக்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார். 

இவ்வாறு அமைக்கப்படவுள்ள சமுத்திரவியல் பல்கலைக்கழகத்துக்குரிய இடத்தை தெரிவு செய்வதற்கான கள விஜயம், அரச உயர் அதிகாரிகளினால் செவ்வாய்க்கிழமை (27) மேற்கொள்ளப்பட்டது. 

குறித்த பல்கலைக்கழகத்துக்கு தகுதியான இடமாக புத்தளம் காச நோய் வைத்தியசாலைக்கு அண்மையில் கடற்கரை சார்ந்த அரச காணி இனங்காணப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரிவித்தார். 

இவ்விஜயத்தின் போது, தொழிற்பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்கான இடமும் புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் இனங்காணப்பட்டுள்ளதுடன், சமுத்திரவியல் பல்கலைக்கழகத்துடன் தொழிற்பயிற்சி நிலையமும் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கம்பஹாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் இந்த பல்கலைக்கழகம் இல்லாத நிலையில் புத்தளத்தில் அது அமைக்கப்படவுள்ளதுடன்,  இதனை ஆரம்பிப்பதன் மூலம் சாதாரண தரம், உயர் தரம் போன்றவற்றோடு கல்வியை நிறுத்தியோரும் இத்துறையில் நாட்டமுடையோறும் கல்வியை கற்று, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர் தொழில்வாய்ப்புகளை பெறமுடியும் என்றும் விசேடமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலமைப்பரிசில்களும் வழங்கப்படுகிறன என மாகாண சபை உறுப்பினர் நியாஸ் தெரிவித்தார்.

திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், புத்தளம் மாவட்டச் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக், சமுத்திரவியல் பல்கலைக்கழக உதவி பீடாதிபதி திலக் தர்மரத்ன, பணிப்பாளர் பீ.வி.ஐ. பெரேரா, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் செயலாளர் அபேரத்ன உள்ளிட்டோர் இவ்விஜயத்தின் போது கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .