2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

புத்தளத்தில் பலத்த மழையுடன் மினி சூறாவளி: 30 வீடுகள் சேதம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முஹம்மது முஸப்பிர், எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரில் நேற்று திங்கட்கிழமை (15) மாலை 03 மணியளவில் திடீரென வீசிய மினி சூறாவளியினாலும் பெய்த பலத்த மழையினாலும் சுமார் 30 வீடுகளின் கூரைத்தகடுகள் காற்றினால் அள்ளுண்டுச் சென்றுள்ளதுடன், பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

புத்தளம் - மக்கள்புரம், முள்ளிபுரம், வாஹித் பள்ளி வீதி, வெட்டாளை, கூபா நகர் மற்றும் இல்யாஸ் தோட்ட கிராமம் என்பன இந்த திடீர் அனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

சிறுபோக உப்பு உற்பத்திக்கு தயாராகிக்கொண்டிருந்த உப்பு உற்பத்தியாளர்களின் ஆரம்ப விளைச்சலும் இந்த திடீர் அனர்த்தம்  காரணமாக அழிவடைந்துள்ளது.

இந்த மினி சூறாவளியில் சிறிய ரக படகுகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட மீனவரொருவர் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள், புத்தளம் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பிரதேச கிராம உத்தியோகத்தர், புத்தளம் பொலிஸார் ஆகியோர் உடனடியாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அத்துடன், ஏற்பட்டுள்ள சேத விவரங்களை மதிப்பிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X