Princiya Dixci / 2016 மார்ச் 22 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம். சனூன்
இந்தியா- தமிழ்நாடு, சேலம் நகரில் அமைந்துள்ள நூர் அல்-இஸ்லாம் அரபுக் கல்லூரி விரிவுரையாளரும் பிரபல நாவலரும், பல நாடுகளுக்கும் சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவருமான மௌலானா மௌலவி எம்.எச்.எம். அபூ தாஹிர் (பாகவி, காஸிமி) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்;.
புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் அழைப்பின் பேரில் அவர், புத்தளத்துக்கும் விஜயம் செய்து புத்தளம் மற்றும் கல்பிட்டி நகர்களில் பல விசேட பயான்களை நிகழ்த்தவுள்ளார்.
நாளை 23ஆம் திகதி கல்பிட்டி ரஹ்மானியா அரபுக்கல்லூரியில் முற்பகல் 11 மணி தொடக்கம் 12 மணி வரை, மத்ரஸா மாணவர்களுக்காக 'அறிவு பெற அயராத முயற்சி அவசியம்' எனும் தலைப்பிலும், மாலை 04 மணி தொடக்கம் 06 மணி வரை கல்பிட்டி முயீன் மஸ்ஜிதில் பெண்களுக்காக 'பெண் மனைவியாக, தாயாக' எனும் தலைப்பிலும் 06.50 தொடக்கம் இரவு 08 மணி வரை கல்பிட்டி பஜார் ஜும்மா மஸ்ஜிதில் வியாபாரிகளுக்காக 'முஸ்லிகளின் வியாபாரம் எவ்வாறு அமைய வேண்டும் ' எனும் தலைப்பிலும் உரையாற்றவுள்ளார்.
நாளை மறுதினம் 24ஆம் திகதி மாலை 04 மணி தொடக்கம் 06 மணி வரை புத்தளம் அப்துல் மஜீத் கல்வி நிலையத்தில் ஆலிம்கள், மத்ரஸா விரிவுரையாளர்கள், உயர் தர மாணவர்களுக்காக 'அறிவு துறையில் சிறப்பு தேர்ச்சி பெற வேண்டியதன் அவசியம் ' எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை புத்தளம் புதுப்பள்ளியில் 'பல்லின சமூகத்தில் முஸ்லிம்களின் வாழ்வியல் ' எனும் தலைப்பில் ஜும்மா பிரசங்கம் நிகழ்த்த உள்ளதோடு அன்று மாலை 04 மணி தொடக்கம் 06 மணி வரை புத்தளம் புதுப்பள்ளியில் பெண்களுக்காக 'குடும்ப சுமையில் மன நிறைவு காண்பது எவ்வாறு' எனும் தலைப்பிலும் இரவு 06.50 தொடக்கம் 08.30 வரை பொது மக்களுக்காக 'நிம்மதிக்கான வழிகள் ' எனும் தலைப்பிலும் அவர் உரையாற்றவுள்ளார்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago