2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

புத்தளம் மங்களஎளிய சமுர்த்தி வங்கியில் 9,683,200 ரூபாய் சேமிப்பு

Niroshini   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

கடந்த 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இடம்பெற்ற புத்தாண்டு சேமிப்பு வாரத்தில் புத்தளம் மாவட்டத்தின் மங்களஎளிய வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் கீழ் உள்ள பத்து கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகள் 96 இலட்சத்து 83ஆயிரத்து 200 ரூபாய் சேமிப்பு செய்துள்ளதாக குறித்த வங்கியின் முகாமையாளர் திருமதி எஸ்.ஏ.ஜே.எஸ்.பெரேரா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம் கடந்த 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை புதுவருட சேமிப்பு வாரமாக அறிவித்திருந்தது.

இதற்கிணங்க,எமது வங்கியின் கீழ் உள்ள புபுதுகம, மங்களஎளிய, கொத்தான்தீவு, கட்டைக்காடு, பூனப்பிட்டி, சின்னப்பாடு, பள்ளிவாசல்பாடு, பெருக்குவற்றான், சமீரகம, கணமூலை தெற்கு ஆகிய பத்து கிராமங்களில் உள்ள சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற பயனாளிகளும் சமுர்த்திக் கொடுப்பணவு பெற்றுக்கொள்ளாது வங்கியூடாக கடன் உள்ளிட்ட உதவிகளைப் பெறுகின்ற மக்களும் மிகவும் ஆர்வத்துடன் சேமிப்புக்களை செய்துள்ளனர்.

அத்துடன், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் எமது வங்கியில் புதுவருட சேமிப்பு வாரத்தில் சேமிப்புக்களைச் செய்தவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

இதன்படி, எமது மங்களஎளிய வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் 1503 பேர் அங்கத்தவர், பங்கு, சிறுவர், திரியமாதா,  உள்ளிட்ட கணக்கில் சேமிப்பு செய்துள்ளதுடன், இவர்களுக்கான பரிசில்கள் விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X