2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பிரதட்டை நேர்த்திக்கடன்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 12 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசேகர

அரசாங்கத்தினதும் பிரதமரினதும் வெற்றியை அடுத்து, முன்னாள் இராணுவவீரரொருவர் சுமார் 3கிலோமீற்றர் தூரம், பிரதட்டை (அங்கப்பிரதட்சனை) செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு சாதகமான தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் ஆண்டிகமையில் இருந்து சியமலாகஸ்வௌ ஐயனார் கோயிலை பிரதட்டை மூலமே வந்தடைவதாக சனன் குமார என்ற முன்னாள் இராணுவ வீரர், வேண்டுதலை முன்வைத்திருந்தார்.

அந்த வேண்டுதலை அவர், ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றி வைத்தார்.

இவர், இராணுவத்தில் ஆறு வருடங்கள்  பணியாற்றிய ஓய்வு பெற்று வெளிநாடொன்றில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X