Princiya Dixci / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம். சனூன்
புத்தளம் தள வைத்தியசாலையில் பிரதம இலிகதராக கடமையாற்றி தற்போது புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றுள்ள எச்.எம். சபீக்கின் பிரிவுபசார வைபவம், புத்தளம் தள வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை (02) நடைபெற்றது.
புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவரும் புத்தளம் பிரதேச செயலாளருமான எம்.ஆர்.எம். மலிக் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
முன்னாள் வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேரா எச்.எம்.எம். சபீக்கான நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேரா, சமூக சேவையாளர் சித்தீக் ஹாஜியார், புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபை தலைவர் பீ.எம். ஜனாப், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலிசப்ரி, புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.எம். மு{ஹசி, வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களான எஸ்.ஆர்.எம். ஹினாயத்துல்லாஹ், எம்.எச்.எம். அம்ரீன், வைத்தியர்கள் மற்றும் தாதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .