Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
புத்தளம், தப்போவ வனப்பகுதிக்குட்பட்ட பஹரிய பிரதேச வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் பாலை மரங்களை வெட்டி குற்றிகளைக் கடத்த முற்பட்ட நபரொருவரை, புத்தளம் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள், நேற்று திங்கட்கிழமை (15) கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், பஹரிய பிதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவருடன் இருந்த மேலும் இரண்டு பேர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், சில காலத்துக்கு முன்னரும் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் இவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய ரக லொறி ஒன்றையும் மரம் வெட்டுவதற்கான இயந்திரங்களையும் உபயோகித்துள்ளமையால் குறித்த வனப்பகுதியில் யானைத் தொல்லையைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த வேலி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடியவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள புத்தளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
42 minute ago
45 minute ago
48 minute ago