2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பாழடைந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

Thipaan   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

புத்தளம் தில்லையடி பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து சனிக்கிழமை மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் தனது மனைவியான டைட்டஸ் டேனியல் இந்திராணி (வயது 49) என்பவருடையது என அப்பெண்ணின் கணவரான எம். பண்டார (வயது 70) என்பவரினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும், அவரது கணவரும் புத்தளம் பிரதேசத்தில் யாசகம் பெற்று வந்தவர்கள் எனவும், அவ்விருவரும் சடலம் மீட்கப்பட்ட பாழடைந்த வீட்டுக்கு அண்மையில் உள்ள மற்றொரு பாழடைந்த வீட்டில் தங்கியிருந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும், அப்பெண் தினமும் மதுபானம் பாவித்து வந்துள்ளமையும், அப்பெண் மலச்சிக்கல் நோய்க்கு உள்ளாகி இருந்தமையும் நீதவான் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளன.

இப்பெண்ணின் மரணம் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட புத்தளம் பதில் நீதவான் அசோக எஸ். பி. ரணசிங்க , சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனையினை மேற்கொண்டு அதன் அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குளியாபிட்டி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் புத்தளம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X