2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பாவனைக்கு உதவாத 145 தொன் அரிசியை விற்கத் தடை

Kogilavani   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு அநுராதபுரத்தில் உள்ள பிரதான களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மனிதப் பயன்பாட்டுக்கு உதவாத 143,150 கிலோகிராம்  அரிசியை விற்பனை செய்ய மற்றும் விநியோகம் செய்யும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு, அநுராதபுரம் மாவட்ட நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் நதிகா டீ. பிரியந்த உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் மாநகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் போது, நாடு, பொன்னி சம்பா மற்றும் கெக்குளு அரிசி உள்ளிட்ட சுமார் 143,150 கிலோகிராம் அளவிலான, மனித பாவனைக்கு உதவாத அரிசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் இந்த அரிசியின் பெறுமதி, சுமார் 8,998,950 ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X