2021 மே 08, சனிக்கிழமை

மடிக்கணினிகள் கையளிப்பு

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஜூலை 23 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் அமைதி தொண்டார்வ நிறுவனத்தால், புத்தளம் நகரப் பாடசாலைகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

பாடசாலை அதிபர்கள், நிர்வாகத்தைத் திறமையாக நடத்தி செல்ல உதவி செய்யும் வகையில், பாடசாலைக்கொரு மடிக்கணினி வழங்குவதற்கு, அமைதி தொண்டார்வ நிறுவனத்தால் கடந்த 6 மாத காலமாக வகுக்கப்பட்ட திட்டம், இதன்மூலம் வெற்றியளித்துள்ளது.

அதன் வகையில், முதற்கட்டமாக புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி, வெட்டாலை அசன் குத்தூஸ் பாடசாலை, பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபர்களிடம், அமைதி தொண்டார்வ நிறுவன அங்கத்தவர்களால், மடிக்கணினிகள் அண்மையில் கையளிக்கப்பட்டன.

அடுத்த கட்டமாக, மீதமுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அமைதி தொண்டார்வ நிறுவனத்தினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X