Princiya Dixci / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் அதன் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தாம் கட்டை மற்றும் பத்துளு ஓயா ஆகிய பிரதேசங்களில் வைத்தே குறித்த லொறிகளை, நேற்று புதன்கிழமை (14) மாலையும் செவ்வாய்க்கிழமை (13) இரவும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் கைப்பற்றப்பட்ட மணல் லொறிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், இரு சாரதிகளையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago